16th January 2024 19:58:53 Hours
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை விவசாயிகளுக்கு உதவும் நிமித்தம் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் வாழ்வாதார உதவித் திட்டத்தை ஜனவரி 13 ஆம் திகதியன்று ஒருங்கிணைத்தனர். இத் திட்டம் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்திற் கொண்டு அவர்களின் வருமான அளவை அதிகரிக்கும் பல அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. நிகழ்ச்சி திட்டத்தில் சர்தா தொலைகாட்சி மூலம் 'சமாதானத்திற்கான சர்வமதக் கூட்டணி' மற்றும் " சர்தா சமூக சேவை அலகு" ஆகியவற்றுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு பண்ணை விலங்குகள், விவசாய உபகரணங்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது.
இத் திட்டமானது கடுவெல ‘மஹமேவன அசபுவ’ எனும் இடத்தில் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 6 விவசாயிகளுக்கு 16 கறவை மாடுகள் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. சர்தா சமூக சேவை பிரிவு - அபயதனபுண்யா திட்டத்துடன் இணைந்து 'இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது. சர்தா தொலைகாட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பிரசாத் பினுவர, அவரது ஊழியர்கள் மற்றும் வண. கடவத்த விஜித வன்ஷ தேரர் ஆகியோரின் முயற்சிக்கு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி சார்பில் சிவில் விவகார அதிகாரி நன்றியினை தெரிவித்தார்.