17th April 2023 18:05:02 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்குப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வருடாந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 9 ஆம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்ச்சியில் பாரம்பரிய மற்றும் கிராமிய விளையாட்டுகளான வழுக்கு மரம் ஏறுதல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல், தடைதாண்டி ஓடுதல், வினோத உடை போட்டி, புத்தாண்டு அழகுராணி தேர்வு, போன்ற விளையாட்டுகள் இடம்பெற்றன. விழாவின் பாரம்பரிய மாதிரியான ('கெமி கெதர,) கிராமத்து வீடு அலங்காரங்கள் மற்றும் சம்பிரதாயங்கள், சடங்குகள் மற்றும் பிற ஏற்பாடுகள் ஆகியவற்றால் நிறைந்திருந்தது.அன்றைய விசேட தினத்தில், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியினால், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பணிபுரியும் 35 சிவில் ஊழியர்களுக்கு 5 கிலோ அரிசி பொதியுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன.
பிரதம அதிதியாக, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் ஒருங்கிணைப்பு (தொண்டர்) பிரிகேடியர் எச்எம்எல்கே அமுனுகம, சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள், குடும்ப உறுப்பினர்கள். இந்த புத்தாண்டு விழாவை கண்டுகளித்தனர்.