Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2021 12:10:31 Hours

கிழக்கு படையினரால் விகாரை கட்டுமான பணிகள் நிறைவு

திம்புலாகல பந்தனகல ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் வண. தேவகல ஹேமந்தலங்கார தேரரின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் பணிப்புக்கமைய 2 வது (தொ) இலங்கை சமிக்ஞை படையின் சிப்பாய்களால், விகாரையின் தூபிக்கு வர்ணம் பூசுதல், ஓவியங்களுக்கு நிறம் பூசுதல், விகாரையின் சுற்றுவட்டாரம், தியான மண்டபம் என்பவற்றை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

மேலும் குறித்த விகாரை வளாகத்தை வண்ணமயமாகவும் முழுமையானதாகவும் கட்டமைப்பதற்காக உதவுமாறு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி 2 வது (தொ) இலங்கை சமிக்ஞை படையின் சிப்பாய்கள் உட்பட தகைமை கொண்டவர்களையும் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார்.