23rd July 2021 08:00:13 Hours
வாகரையில் 233 வது பிரிகேட்டிற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய வியாழக்கிழமை 22)) விஜயம் செய்தார். வளாகத்திற்கு வந்ததும் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் வாகன தொடரணிக்கான இராணுவ மரியாதையினை அடுத்து 233 வது பிரிகேட் தளபதி கேர்ணல் வசந்த ஹேவகே வரவேற்றார்.
233 வது பிரிகேட் படையினருக்கு கிழக்கு தளபதி உரையாற்றுகையில் அனைத்து நிலையினரிதும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தை பேணுகையுடன் தங்கள் சேவையை வழங்க வேண்டுமென எடுத்துரைத்தார். மேலும், நாட்டின் தற்போதைய தொற்று சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் வலியுறுத்தினார். தற்போது வாகன விபத்துக்கள் அதிகமாக காணப்படுவதால் பயணிக்கும்போது அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் 233 வது பிரிகேட் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.
கிழக்கு தளபதியின் வருகையுடன் 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த, கட்டுபாட்டு அலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரிகேட் பணிநிலை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.