Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2021 09:30:34 Hours

கிழக்கில் நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரண்டு வீடுகள் வீடற்ற குடும்பங்களுக்கு கையளிப்பு

ஆளுமை மேம்பாட்டு விரிவுரையாளர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் முதித்த லாங்சக்கரவின் ஆகியோரின் அனுசரனையில் சின்னவத்த மற்றும் சிப்பிமடுவில் புதிதாக கட்டப்பட்ட மேலும் இரண்டு வீடுகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவினால் புதன்கிழமை 12 ம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக சிவில் விவகார அதிகாரி, 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, 11 வது (தொண்) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி,அதிகாரிகள் 4 வது ஜெமுனு ஹேவா மற்றும் 11 வது (தொண்) இலங்கை சிங்க படையணியின் சிப்பாய்களும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு பணிக்காக தாராளமாக பங்களித்தமைக்காக படையினருக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.