07th November 2021 06:51:07 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பணிப்புக்கமைய கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் அறிவுரைக்கமைய 4 வது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணி மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய்களால் மெதிரிகிரிய மற்றும் அம்பாறை பகுதிகளில் அநாதரவான குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளுக்கான நிதி உதவிகள் ‘சிரச நிவாச” திட்டத்தின் 3 வது கட்டமாக வழங்கப்பட்டிருந்தன.
'சிரச' ஊடக வலையமைப்பு இராணுவ தளபதியூடாக மேற்படி குடும்பங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டிருந்ததை தொடர்ந்து, மேற்படி இரு குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான இராணுவத்தின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள உதவிகள் பெற்றுகொள்ளப்பட்டிருந்தது. அதற்கமைய கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் மேற்படி திட்டம் உரிய நேரத்தில் நிறைவு செய்யப்பட்டு திறந்து வைப்பதற்காக கையளிக்கப்பட்டன.
மேற்படி வீடுகளை திறந்து வைப்பதற்கான நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் 24 வது படைப்பிரிவு தளபதி, கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி ஆகியோர் மேற்படி இரு வீடுகளையும் வழங்கி வைப்பதற்காக கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு சனிக்கிழமை (30) நடைபெற்ற எம்டிவீ மற்றும் எம்பீசி வலையமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி திருமதி நீத்ரா வீரசிங்க மற்றும் திரு பிரியந்த விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மெதிரிகிரியவைச் சேர்ந்த திருமதி மாலனி ரூபலதா மற்றும் அம்பாறையைச் சேர்ந்த திரு நிஷாந்த செனரத் பண்டார ஆகியோரின் குடும்பங்கள் வறுமையால் எதிர்கொள்ளும் அல்லல் நிலைமைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு இராணுவத்தின் தொழில்நுட்ப மற்றும் மனித வள உதவிகள் வழங்கப்பட்டன. இதுபோன்ற பல திட்டங்கள் இராணுத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதன்போது பிரதம அதிதி வீடுகளின் பெயர் பலகைகள் திறைநீக்கம் செய்து வைக்கப்பட்டிருந்ததோடு, மங்கள விளக்கேற்றல் மற்றும் பால் பொங்குதல் நிகழ்வுகளும் பயனாளிகளின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது 'சிரச' ஊடக வலையமைப்பின் அதிகாரிகள், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார இணைப்பாளர். 4 வது இலங்கை பொதுச் சேவை படை மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படைகளின் கட்டளை அதிகாரிகள், பயனாளி குடும்பங்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர். நன்கொடையாளர்களின் உதவியுடன் இராணுவ சிப்பாய்களால் இவ்வாறான வீடுகள் வறிய குடும்பங்களுக்கு, நிர்மாணித்துக் கொடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.