Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2022 13:16:25 Hours

கிழக்கில் இராணுவத்தினரால் 250 குடும்பங்களுக்கு நிவாரணத் திட்டம்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் முயற்சியின் கீழ், வரையறுக்கப்பட்ட 'சியாம்சிட்டி சிமெண்ட்' தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் வாடிமுனை, ஊத்துச்சினை மற்றும் கல்லாச்சி பிரதேசங்களில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, திங்கட்கிழமை (03) இலவச உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஊத்துச்சினை தமிழ் பாடசாலை வளாகத்தில் 12 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 250 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 6000/= பெறுமதியான 250 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 232 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் இந்த திட்டம் முன்னெடுகக்ப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், பல்லேகல நாலந்தா பௌத்த பாடசாலையின் அதிபர் வண. கெட்டகும்புரே தர்மராம தேரர் அவர்கள் இத்திட்டத்தினை ஒருங்கிணைத்தார்.

23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க, 232 வது பிரிகேட் தளபதி கேணல் பிரியஷான் மல்வரகே, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் ராஜீவ் பெர்னாண்டோ, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் பிரபாத் ஹல்பகே, 12 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி கட்டளை அதிகாரி மேஜர் சந்தன வன்னிநாயக்க, அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் நன்கொடையாளர் பிரதிநிதிகள் இந்த விநியோக விழாவில் பங்கேற்றினர்.