30th March 2019 16:24:46 Hours
புதிதாக நியமிக்கப்பட்ட 13 ஆவது கிளிநொச்சி பாதுகாப்பு படையின் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் சமய அனுஷ்டான மற்றும் இராணுவ சம்பிரதாய முறையின்பிரகாரம் தனது கடமையினை கடந்த வெள்ளிக் கிழமை (29) ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையானது 8 ஆவது இலங்கை பீரங்கிபடையினரால் வழங்கப்பட்டன. அதன்பிறகு நான்கு பிரதான சமய வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து புதிய தளபதி தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் மங்கள விளக்கேற்றுதலின் பின்னர் தனது பதவியேற்பின் ஞாபகர்த்தமாக மரக்கன்று ஒன்றினையும் தலைமையக வளாகத்தில் நட்டார்.
இந்நிகழ்வின்போது புதிய தளபதியினால் நான்கு சூரிய சக்தி மின் வழங்கி தட்டுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் அனைத்து அதிகாரிகளுடனும் விருந்தில் கலந்துகொண்டார். குறித்த இந்நிகழ்வில் 65 மற்றும் 66 படைப்பிரிவு தளபதிகள், படைத் தளபதிகள், கட்டளைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உள்ளிட்ட பலர் சமூகமளித்திருந்தனர். Authentic Nike Sneakers | Sneakers