Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th July 2021 22:17:50 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் கிருஷ்ணபுரத்திலுள்ள குடும்பத்திற்கு புதிய வீடு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் கூட்டு முயற்சி மற்றும் பங்களிப்பின் பலனாக இராணுவ – சிவில் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் தேவையுள்ள குடும்பமொன்றுக்கு நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு திங்கள்(5) திறந்து வைக்கப்பட்டது.

இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைவாக தேவையுள்ள குடும்பங்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்திற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களினால் வழங்கப்பட்ட ஊக்குவிப்பின் பலனாக கிளிநொச்சி கிருஸ்ணபுரம் இலக்கம் 3630 என்ற பகுதியில் வசிக்கும் திரு . அரியதாஸ் ரமேஷ் என்பவரின் குடும்பத்தின் வருமை நிலையை கருத்தில் கொண்டு தங்குமிடம் இல்லாமல் அல்லலுற்ற மேற்படி குடும்பத்திற்கான புதிய வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

அரசாங்கத்தின் நல்லிணக்கத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், 573 வது பிரிகேட் தளபதி பிரிகேடிய மனோஜ் மதுரப்பெரும மற்றும் 573 வது பிரிகேட் அதிகாரிகளின் திதியுதவியில் 9 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சமிந்த விஜேசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் படைப்பிரிவின் சிப்பாய்களால் நிர்மாண பணிகளுக்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் மனித வள உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் 573 வது பிரிகேட் மற்றும் 9 வது விஜயபாகு காலாட்படைப்பிரிவின் சிப்பாய்களால் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு அவசியமான வீட்டு தளபாடங்கள், ஏனைய உபகரணங்கள், உலர் உணவு பொதிகள், காய்கறி வகைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகளும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

புதிய வீட்டின் திறப்பு விழா நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க கலந்துகொண்டிருந்ததுடன் நிர்மாண பணிகளை முன்னெடுத்த படையினருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் 57 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், கிருஷ்ணபுரம் கிராம சேவகர் உத்தியோகத்தர் திரு சிவராசா ஜடுகுலம், கிருஷ்ணபுரம் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சசிதரன் சுதர்ஷனி மற்றும் பல அதிகாரிகளும் சுகாதார விதிமுறைகளை பின்ற்றி நிகழ்வில் கலந்துகொண்டனர்.