Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2020 22:36:46 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி படைத் தலைமையகங்களுக்கு விஜயம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் H M J K குணரத்ன அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் கீழுள்ள 57, 571, 572, படைத் தலைமையகங்களுக்கும் , முதலாவது சிங்கப்படையணி, 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகங்களுக்கு கடந்த ஜனவாரி மாதம் 15 – 19 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

57 ஆவது படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்ட கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியை அந்த படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் B P S டி சில்வா அவர்கள் வரவேற்றார்.

பின்னர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியினால் தலைமையத்திலுள்ள படையினர்கள் மத்தியில் அர்ப்பனிப்பு மற்றும் ஒழுக்கம் தொடர்பாக உரை நிகழ்த்தப்பட்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் இணைந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதிக்கு நடவடிக்கைகள், நிர்வாகம் தொடர்பான விளக்கங்களை வழங்கி வைத்தார். இச்சந்தர்ப்பத்தில் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth