Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2019 15:59:19 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான ரல்ப் நுகேரா அவர்களின் பிரியாவிடை நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரல்ப் ஏ நுகேரா அவர்கள் கடந்த புதன் கிழமையன்று (27) தனது இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். அந்த வகையில் இவர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் தளபதியாக சேவையாற்றியதுடன் இராணுவ விதிமுறைகளுக்கமைவாக இவர் தமது சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதன் போது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 7ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியால் இவ் அதிகாரியவர்களுக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இடம்ட பெற்றது.

இராணுவ படையினரால் வழங்கப்பட்ட இவ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வின் பின்னர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் தமது காரியாலயத்தில் புதிதாக இப் படைத் தலைமையகத்திற்கு சேவையாற்ற வருகை தந்துள்ள படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி விஜித்த ரவிப்பிரிய அவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் கொடியை கையளித்தார். மேலும் மேஜர் ஜெனரல் ஜி விஜித்த ரவிப்பிரிய அவர்கள் 57ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியாக சேவையாற்றியுள்ளார். இதன் போது வெளியேறும் கிளிநொச்சி படைத் தளபதியவர்கள் தமது கையொப்பத்தை இட்டார்.

அதன் பின்னர் மேஜர் ஜெனரல் நுகேரா அவர்கள் தமது படையினருடனான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் தமது சேவைக் காலத்தின் போது ஒத்துழைப்பை வழங்கிய அதிகாரிகள் மற்றும் படையினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்து இப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக முன்னரங்க பாதுகாப்பு வலய அதிகாரியவர்கள் 57 65 மற்றும் 66 போன்ற படைத் தலைமையகங்களின் தளபதிகள் போன்றோர் கலந்து கொண்டதுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரர் நுகேரா அவர்கள் விடைபெற்று சென்றார். jordan release date | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth