Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th December 2019 14:13:14 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலையைகத்திற்கு புதிய தளபதி பதவி நியமனம்

மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலையைகத்திற்கு 14 ஆவது படைத் தளபதியாக பதவி நியமனம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு (24) ஆம் திகதி செவ்வாய் கிழமை இராணுவ சம்பிரதாய முறைப்படி மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்றன.

புதிதாக நியமனம்பெற்ற இப் படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி 7 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியின் படையினரால் நுலைவாயிற் மரியாதை மற்றம் இராணுவ மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டதனைதொடர்ந்து, இப் புதிய தளபதி மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் மங்கள விளக்கேற்றியதுடன் உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் படைத் தலைமையக வளாகத்திற்குள் மரக்கன்றை நட்டுவைத்தார், அத்துடன் அனைத்து படையினர்களுடன் தேநீருக்குப் உபசாரத்திற்கு பிறகு, அவர் தலைமையக கேட்போர் கூடத்தில் படையினர்களுக்கு தனது எதிர்கால பணி தொடர்பாக உரையாற்றினார்.

இந்த நிகழ்வுக்கு கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி, 66 ஆவது படைப் பிரிவின் தளபதி, படைப் பிரிவு தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் ஜி. விஜித ரவிபிரிய அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறுப்பிட தக்க விடயமாகும்.Buy Sneakers | Nike for Men