Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2021 21:19:43 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் வேண்டுகோளின் பேரில் நன்கொடையாளர்கள் மற்றும் புண்ணியவான்களின் ஒருங்கிணைந்த குழு புதுவருடத்தை முன்னிட்டு நட்புறவு மற்றும் நல்லெண்ணத்தை அடிப்படையாக கொண்டு வெள்ளிக்கிழமை (09) கிளிநொச்சியில் 250 க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை பகிர்ந்தளித்தனர்.

இந்த மனிதாபிமான நிதியுதவியினை திரு நவீன் பெரேரா மற்றும் அவரது குடும்பத்தினர், திரு தீபன், திரு இஷார லியானகே, திரு கே சன்ஜீவ் குமார், திரு பி லால் டி சில்வா, திரு எல்.எச்.ஆர் டி சில்வா, திரு பி லீனா டி சில்வா, திரு சஞ்சீவ ருக்ஷன் மற்றும் சிலரால் வழங்கப்பட்டது. மேலும், தென் பகுதியை சேர்ந்த இவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக பல்வேறு மட்டங்களில் இத்திட்டத்திற்கு பங்களித்தனர்.

இத்திட்டமானது பிரதானமாக கிளிநொச்சி முழு வதுமாக வசிக்கும் 250 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபா 7200.00 பெறுமதியான உலர் பொதியும் ரூபா 1500.00 பெறுமதியான எழுதுபொருட்கள், பேனாக்கள் மற்றும் பென்சில்கள், வாசிப்புப் உபகரணங்கள் மற்றும் புத்தக பை உள்ளடங்களான பாடசாலை உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஒவ்வொரு பொதியிலும் சிவப்பு அரிசி, மாவு, பருப்பு (வட்டானா) , சிவப்பு பருப்பு, சோயா ,இறைச்சி, சர்க்கரை, தேயிலை, பால் மா, டின் மீன் (1), நூடுல்ஸ் பாக்கெட்டுகள், கௌப்பி, கடலை, பற்பசை, பற் தூரிகைகள் மற்றும் சவக்காரங்கள் என்பன உள்ளடங்கியிருந்தன. இத்திட்டமானது கொவிட் 19 மற்றும் இயல்பான வாழ்வாதார நிலைமைகளை கருத்திற் கொண்டு சிங்கள மற்றும் இந்து புதுவருடத்தினை முன்னிட்டு வழங்கப்பட்டது.

நிகழ்வில் பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் சமன் லியனகே, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் தீபால் ஹதுருசிங்க, சிரேஸ்ட பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் , பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிப்பாய்கள் மற்றும் பிரதான நன்கொடையாளர் திரு நவீன் பெரேரா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

கொவிட் 19 சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஒவ்வொரு வீடுகளுக்கும் நன்கொடையாளர்களுடன் படையினர் சென்று குறித்த பொதிகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தகுதியான மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் பகிர்ந்தளித்தனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக SFHQ- சிவில் விவகாரங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் கேணல் எல். கித்சிரி மற்றும் அனைத்து அதிகாரிகளும் நன்கொடையாளர்களை ஒருங்கிணைப்பதற்கும் நிகழ்வை வெற்றிகரமாக மாற்றுவதற்கும் முழு ஆதரவை வழங்கினர். bridge media | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth