Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2021 13:00:22 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய புத்தர் சிலை வழங்கல்

'பொசன்' போயா தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களால் அனைத்து நிலையினர்களதும் நீண்டகால தேவையை பூர்த்திசெய்யும் வகையில் 'பிரித்' பராயணத்திற்கு மத்தியில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் புத்தர் சன்னதி திறந்து வைக்கப்பட்டது.

புதிய சிலையை தாபிப்பதற்காக சிறப்பு போதி பூஜை இடம்பெற்றதுடன். அந்த பூஜையினை வவுனியா மடுகந்த விகாரையின் தலைமை தேரர் வண. கிரிகல்வெவ விமலசார தேரரால் நடத்தப்பட்டது. ஊர்வலமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியால் புத்தர் சிலை மரியாதையுடன் சன்னதிக்குக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க, 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் நிலம் ஹெரத், பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் தீபால் ஹத்துருசிங்க, பிரிகேடியர் பொது பணி உட்பட கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகளும் சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.