Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th July 2021 14:00:09 Hours

கிளிநொச்சி படையினரால் வட்டகச்சி குடும்பத்திற்கு புதிய வீடு

கிளிநொச்சி வட்டகச்சி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் திருமதி சிவசாமி முத்து அவர்களின் குடும்பத்திற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வீடமைப்பு திட்டத்தின் கீழ் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், நல்லிணக்கம், நட்புறவு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக இராணுவ தளபதி வழங்கிய வழிகாட்டலுக்கமைய நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களிலும் தனியார் நன்கொடையாளர்கள் மற்றும் படையினரின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் படையினர் நிர்மாண பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை (13) வடக்கச்சியில் நடைபெற்ற நிழக்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் கலந்துகொண்டதுடன், பயனாளிகளுக்கான வீட்டையும் வழங்கி வைத்தார். வீட்டு நிர்மாணத்துக்கு அவசியமான மூலப் பொருட்கள் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது.

அதனையடத்து 06 வது சிங்கப் படையின் படையினரின் அனுசரணையில் பயனாளிகளுக்கு வீட்டு உபகரணங்கள், உலர் உணவு பொதிகள் மற்றும் மரக்கறி வகைகள் ஆகியவை அடங்கிய நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இத்திட்டம் 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன மற்றும் 572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 6 வது இலங்கை சிங்கப்படையணியின் படையினரின் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.

இதன்போது மேஜர் ஜெனரல் ரணசிங்க படையினரின் கட்டுமான பணிகளையும் ஏழைக் குடும்பத்தின் நலனுக்கான படையினரின் கடின உழைப்பையும் பாராட்டினார். 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கொவிட் – 19 அச்சுறுத்தலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி நிகழ்வில் பங்கேற்றனர்.