Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 22:57:41 Hours

கிளிநொச்சி படையினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு தேவையுள்ள குடும்பத்திடம் கையளிப்பு

இராணுவ தளபதியின் பணிப்புரையின் கீழ், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் 9 வது சிங்கப்படையணியின் படையினரால் சன சமூக நிலைய பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு திங்கட்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.

நல்லிணக்கம், நல்லெண்ணம் மற்றும் ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மேற்படி சமூக நலத்திட்டம் 9 வது இலங்கை சிங்கப்படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எல்.ஏப்ப அவர்களின் மேற்பார்வையில் அப்படையணியின் சிப்பாய்களால் நிறைவு செய்யப்பட்டது.

வைத்தியசாலை வீதியின் சன சமூக நிலைய பகுதியில் வசிக்கும் மிக வறுமையான நிலையிலிருந்த திரு. ராசையா ராஜேஸ்வரம் என்பவருக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களை ஏற்பாடு செய்வதற்கான ஏற்பாடுகளும் அப்படையணியினரால் செய்து கொடுக்கப்பட்டன.

இந்து சமய மரபுகளுக்கு அமைய, கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு, கரச்சி மற்றும் கந்த வெளி பிரதேச செயலாளர் ,57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன , 571வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக வெலகெதர, 573வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும மற்றும் சிப்பாய்கள் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பயனாளிகளுக்கு வீடு கையளிக்கப்பட்ட குறித்த நிகழ்வில் கலந்துகெண்டனர். சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்ச்சியின் போது, கரைச்சி பிரதேச செயலாளர் படையினருக்கு நன்றி கூறியுதுடன்,சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, கிளிநொச்சி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக இராணுவத்தினால் வழங்கப்படும் பங்களிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.