Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2019 14:51:27 Hours

கிளிநொச்சி படையினரால் இராணுவ தளபதி வரவேற்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இன்று (18) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் வரவேற்றார்.

பின்னர் இராணுவ தளபதி அவர்களுக்கு கிளிநொச்சி படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு படைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி இறுதியில் அங்குள்ள படையினர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். Best Nike Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals