Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th January 2020 22:06:43 Hours

கிளிநொச்சி படைத் தளபதி படைப் பிரிவுகளுக்கு விஜயம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் பதவிபொறுப்பேற்றலின் பின்னர் புனரின் உள்ள 66 ஆவது படைப் பிரிவு தலைமையகதிற்கு கீழ் உள்ள படைப் பரிவுகளுக்கு ஜனவரி மாதம் 7-8 ஆம் திகதிகளில் தனது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

முதல் தடவையாக 66 ஆவது படைப் பிரிவுக்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களுக்கு 66 ஆவது படைப் பிரிவு தலைமையகதினரால் நுலைவாயில் மரியாதை வழங்கப்பட்டதுடன், 66 ஆவது படைப் பிரிவு படை தளபதி மேஜர் ஜெனரல் மங்கள விஜயசுந்தர அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

பின்னர், இவரின் வருகையின் அடையாளமாக 66 ஆவது படைப் பிரிவின் கேட்போர்கூட வளாகத்திற்கு முன் ஒரு மரக்கன்றை நடவு செய்த அவர், படையினர்களுடன் உரையாற்றினார்.

அத்துடன் 66 ஆவது படைப் பிரிவு கட்டளை தளபதி உட்பட அனைத்து பட்டாலியன் தளபதிகளுக்கு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அனைவருக்கும் விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, அவர் 663 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு தனது விஜயத்தை மேற்கொண்டு, 15ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணியை பார்வையிடுவதற்கு முன்னர் படையினர்களுடன் உரையாற்றினார்.

தொடர்ந்து (08) ஆம் திகதி சங்குபிட்டி ஜெட்டி, 661 ஆவது படைப் பிரிவு, 24 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விஜயம் செய்தார். தொடர்ந்து அரசபுரகுளம் பிரதேசத்தில் உள்ள பட்டாலியன் பயிற்சிப் பாடசாலைக்கு செல்வதற்கு முன்பு அவர் 24ஆவது விஜயபாகு படையணியின் படையினருக்கு உரையாற்றினார். இறுதியாக அவர் 5ஆவது (தொண்டர்) இயந்திர காலாட் படை படையணி, 20ஆவது இலங்கை காலாட்படையணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விஜயத்தை மேற்கொண்டார். Sport media | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK