Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2020 17:21:31 Hours

கிளிநொச்சி அதிகாரிகள் விழிப்புணர்வு விரிவுரையில்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவை புரியும் இராணுவ அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை தணிப்பது மற்றும் மனவுறுதியை மேம்படுத்தல் தொடர்பான விரிவுரை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உளவியல் செயற்பாட்டு பணியகம் , தடுப்பு மருந்து மற்றும் மன நல பணியகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த குழுவின் பிரிகேடியர் ஆர்எம்எம் மொனராகல தலைமையில் ‘மன அழுத்தம் மற்றும் நல்வாழ்வு’ என்ற தலைப்பில் விரிவுரையை நடத்தியது. இதில் 26 க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதே வேளையில் மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டலில் புதன்கிழமை 24 அதிகாரிகளின் உணவு விடுதி நடைமுறைகள் தொடர்பாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக நெளும்பியச கேட்போர் கூடத்தில் விரிவுரை பொது பணி அதிகாரி II (பயிற்சி) அவர்களால் நடாத்தப்பட்டது. Sports News | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE