Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd July 2021 11:00:26 Hours

கிளிநொச்சியில் தேவையுடையவர்களுக்கான 25 உலர் உணவு நிவாரண பொதிகள் விநியோகம்

யாழ்ப்பாண நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையினை கொண்டு 572 வது பிரிகேட் படையினரால் திங்கட்கிழமை (28) கிளிநொச்சியிலுள்ள குமாரசாமிபுரம் பகுதியியில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு 25 க்கும் மேற்பட்ட உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்திலிருக்கும் திரு சஞ்சீவ் நளீன் அவர்களினால் வழங்கப்பட்ட நன்கொடையின் உதவியுடன் கிராம சேவகர்களின் உதவியுடன் வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டலுக்கமைய 572 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

572 பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 14 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி, ஆகியோரின் பங்கேற்புடன் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.