Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2017 08:20:37 Hours

கிளிநொச்சியில் இராணுவத்தினால் நிர்மானிக்கப்பட்ட சுகாதார அலுவலகம் திறந்து வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கிளிநொச்சி பிரதேசத்தில் சுகாதார அமைச்சின் சுகாதார பணிப்பாளர் சுகாதார அலுவலகம் நிர்மானிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை (24) ஆம் திகதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவின் எய்ட்ஸ் டைபர் கரோலசிஸ் மற்றும் மலேரியா உளகளாவிய நிதியத்தின் அனுசரனையுடன் நிர்மானிக்கப்பட்டு ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிட நிர்மானிப்புக்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவின் வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தனவின் மேற்பார்வையில் 65,66 ஆவது படைப் பிரிவின் இராணுவ பொறியியலாளர் சேவைப் பிரிவின் ஒத்துழைப்புடன் எட்டு மாத காலங்கள் நிர்மானிக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு சுகாதார அமைச்சர், வைத்திய அதிகாரிகள், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி, 57 ஆவது படைத் தளபதி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

short url link | Nike