09th April 2023 19:40:49 Hours
கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனபோர்யுத்திகள் பயிற்சி எண்-33 ல் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சின்னங்கள் வழங்கும் நிகழ்வு மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 08) இடம்பெற்றது.
இராணுவத்தில் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவபடுத்தி 79 சிப்பாய்கள் 2 மாத கால பாடநெறியினை நிறைவு செய்தனர்.2 வது இராணுவ விஷேட படையணியின் கோப்ரல் டபிள்யூ.ஏ.எஸ். குமாரவிக்கு பாடநெறியில் சிறந்த மாணவருக்கான கிண்ணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் நளின் பண்டாரநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.