Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2021 15:35:02 Hours

கிரிவெஹெர மற்றும் கதிர்காம ஆலய வளாகங்கள் இராணுவ கொடிகளால் அலங்காரம்

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு பூர்த்தி (ஒக்டோபர் 10) நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், சிப்பாய்களின் பங்கேற்புடன் ஞாயிற்றுக்கிழமை (3) கிரிவெஹெர மற்றும் கதிர்காமம் ஆலய வளாகங்களில் சிப்பாய்களால் வரிசைக்கிரமமாக ஏந்திச் சென்ற இராணுவ கொடிகளுக்கு ஆசி வேண்டி பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்து இராணுவ படையணிகள் , பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், படைப்பிரிவுகள், பிரிகேட்கள், பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் இராணுவக் கொடிகளானது ஆசிர்வாதத்திற்காக மூன்று முறை கிரிவெஹெர தூபியை வாத்திய இசையுடன் சுற்றி எடுத்துச் செல்லப்பட்டதோடு அவை விஷேட மேடையில் வைக்கப்பட்டன. அதனையடுத்து 'கப்ரு்க' பூஜை’ (புனித தூபியை சுற்றிலும் கொடி சாத்தும் நிகழ்வு) இடம்பெற்றதுடன் சகலரும் எண்ணெய் தீபங்களை ஏற்றியதை தொடர்ந்து கிலன்பச பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பின்னர் கிரிவெஹெரவின் தலைமை தேரரால் மத சடங்குள் நிகழத்தப்பட்ட பின்னர் பிரதம விருந்தினரால் தேரர்களுக்கு “பிரிகர” வழங்கி வைக்கப்பட்டது. அதனையடுத்து வெந்தாமரை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஷை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு மத வழிபாடுகளுக்காக கதிர்காம ஆலய வளாகத்திற்கு சென்றிருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் கிரிவெஹெரவின் வென் தூபியை நிர்மாணிக்கும் பணிகளுக்கான நன்கொடையை வண. கோபாவாக்க தம்மிந்த தேரர் அவர்களிடம் வழங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கொடி ஏந்தியவர்கள் 'ஹேவிசி' வாத்திய குழுவினரின் பங்கேற்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடிகள் சிரேஸ்ட அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரதம அதிதியான இராணுவ தளபதியிடம் வழங்கி வைக்கப்பட்டதோடு, ஆலய வளாகத்தில் உள்ள அஷ்டபாலபோதிய'வில் இடம்பெற்ற மத வழிபாடுகளின் போது, இராணுவ தளபதியவர்களால் புனித மரத்திற்கு' அடபிரிகார சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

பின்னர் 'தேவாவ' (வழமையாக இசைக்கப்படும் வாத்திய இசை) நிகழ்வுக்கு மத்தியில் தளபதியவர்களால் தேவாலயத்தின் உள் அறைக்கு ஆசீர்வாதம் பெருவதற்காக இராணுவ கொடிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது புதிய தளத்தின் மேம்பாட்டு பணிகளுக்கான மற்றுமொரு தொகை நன்கொடை இராணுவ தளபதியால் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் சேன வடுகே, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க உட்பட பல சிரேஸ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் விசேட “முருகன் பூஜை” நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

இராணுவ தினத்திற்கு முன்னதாக (அக்டோபர் 10) இடம்பெறும் மேற்படி வழிபாட்டு நிகழ்வுகளின் ஒர் அங்கமாக கிமு 3 ஆம் நூற்றாண்டில் புத்த பெருமானின் இலங்கைக்கான தனது 3 வது விஜயத்தின் போது அவரது நினைவாக மகாசேனன் மன்னரால் பெற்றுக் கொள்ளப்பட்ட புத்தரின் 'உத்தேசிகா' நினைவுச்சின்னங்களுக்கும் இராணுவம் வணக்கம் செலுத்துகிறது.