Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கால் பந்தாட்போட்டியில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் வெற்றி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் வழிகாட்டுதலின் பேரில் 52 ஆவது படைப் பிரிவினரின் மேற்பார்வையின் கீழ் 522 ஆவது படைப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 க்கான கால் பந்தாட்ட போட்டியில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக அணியினர் வெற்றிப் பெற்றனர்.

இறுதிப் போட்டியானது (23) ஆம் திகதி திங்கள்கிழமை 5 ஆவது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது, இப் போட்டி நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டதுடன், ஏராளமான கால்பந்து ரசிகர்கள் மற்றும் சிறப்பு அதிதிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கட்டளை அதிகாரிகள், படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் 51, 52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவுகள் மற்றும் முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையக உள்ளிட்ட பாதுகாப்பு படை தலைமையகங்களின் கீழ் பணியாற்றும் படையினர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 10 கால்பந்து அணிகளின் பங்கேற்புடன் இந்த கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.

அதன்படி, இப் போட்டியில் பாதுகாப்புப் படைத் தலைமையக அணியும், 51 ஆவது படைப் பிரிவு அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அதற்கமைய பாதுகாப்புப் படைத் தலைமையக அணியினர் 51 ஆவது படைப் பிரிவை தோற்கடித்து வெற்றிப் பெற்றன. அதனைத் தொடர்ந்து 51 ஆவது படைப் பிரிவின் சாஜன்ட் ஏ.பி.ஜி.எஸ்.வீரசிங்க அவர்கள் சிறந்த கோலியாகவும், சிறந்த வீரருக்கான விருது லான்ஸ் கோப்ரல் என்.ஏ.கே துஷ்மந்தவுக்கும் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வைத்து வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் முடிவில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் வைத்து கால் பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு யாழ் கால்பந்து கிண்ணத்தை - 2019' வழங்கினார். latest Running Sneakers | Nike for Men