Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

11th September 2019 07:53:55 Hours

காலாட் பயிற்சி நிலையத்திற்கு இராணுவ தளபதி விஜயம்

மின்னேரியவிலுள்ள இலங்கை இராணுவ காலாட் பயிற்சி நிலையத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் (8) ஆம் திகதி மேற்கொண்டார்.

பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை நுழைவாயிலில் வைத்து காலாட் பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே அவர்கள் வரவேற்றார். பின்னர் அங்குள்ள படையினரால் இராணுவ தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.

பின்னர் அங்கு பயிற்சிகளை மேற்கொள்ளும் படையினர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அதன் போது காலாட் படையணியின் விதிமுறைகள் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும், நாட்டின் பாதுகாப்பின் நிமித்தம் இராணுவத்தினரது பொறுப்புக்கள் தொடர்பாக படையினர்களுக்கு எடுத்துரைத்தார்.

பின்னர் இராணுவ தளபதியவர்கள் பயிற்சி நிலைய வளாகத்தினுள் தனது வருகையை நினைவு படுத்தும் முகமாக நாக மரக்கன்றொன்றையும் நாட்டி வைத்து பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.