Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th July 2021 17:45:42 Hours

காலாட் படை பயிற்சி நிலையத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் புதிய தளபதி

மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தின் 41 வது தளபதியாக பிரிகேடியர் சந்தன ரணவீர செவ்வாய்க்கிழமை (21) மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் போது புதிய தளபதிக்கு பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி கேணல் சாலிய டயஸ் அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, பாதுகாவலர் அறிக்கையிடலுடன் மரியாதை வழங்கப்பட்டது. அதனையடுத்து பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்ட பிரிகேடியர் ரணவீர பதவியேற்பின் நினைவம்சமாக மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்தார்.

பின்னர் இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதன் பின்னர் படையினருக்கான தளபதியின் உரையை தொடர்ந்து நிகழ்வு நிறைவடைந்தது. நிகழ்வில் அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் காலாட் படை பயிற்சி கல்லூரியின் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.