Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th August 2021 10:00:46 Hours

காரைநகர் பொதுமக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதில் 51வது படைப்பிரிவினர் மும்முரம்

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவு தளபதி, மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 513 பிரிகேட் சிப்பாய்களால், பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மருதபுரம், கோவளம், களபூமி, பாலாவோடை மற்றும் பாலக்காடு கிராம சேவகர் பகுதிகளில் கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பவுசர்களை பயன்படுத்தி குடிநீரை விநியோகித்தனர்.

பொதுமக்களின் அத்தியாவசியமான தேவையை கருத்திற் கொண்டு ஓகஸ்ட் 16 – 17 ஆம் திகதிகளில் இத்திட்டம் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டதோடு, 513 வது பிரிகேடின் தளபதியின் தலைமையில் வானிலை மாற்றத்தை அவதானித்தும் மக்களுக்கான குடிநீர் தேவையை கருத்திற் கொண்டும் மேற்படி விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்குவின் ஆசிர்வாதத்துடன் 11 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினரினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.