Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2021 16:00:16 Hours

கள்ளப்பாட்டு மாணவர்களுக்கு 59 வது படைபிரிவினரால் புலமைப்பரிசு

59 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் சுஜீவ பேரேராவின் வேண்டுகோளிற்கு இணங்க முல்லைத்தீவு செஞ்சிலுவை சங்க முகாமையாளரினால் நன்கொடைச் செய்யப்பட்ட புலமைப்பரிசில்கள் ஜுலை மாதம் 27ம் திகதி 591 வது பிரிகேட் வளாகத்தில் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

கள்ளப்பாட்டுப் பகுதியின் குறை வருமானம் பெறும் குடும்பங்களின் கற்றல் ஆர்வமுள்ள பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

முல்லைத்தீவு செஞ்சிலுவை சங்க முகாமையாளர் திரு நிதர்ஷன், 591 வது பிரிகேட் தளபதி, 12 வது இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி மற்றும் 24 வது சிங்கப் படையின் கட்டளை அதிகாரி மற்றும் சிவில் விவகார அதிகாரி ஆகியோர் இந்த புலமைப்பரிசில் வழங்கலில் பங்குப்பற்றினர்.