Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2021 21:04:12 Hours

கல்வி முகாமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

ஆசிரியர் சமூகத்திற்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதற்கான ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் நோய் நிவாரணம் மற்றும் தடுப்பு மருந்து பணிப்பகத்தின் வைத்தியக் குழு. செவ்வாய்க்கிழமை (6) தரம், சமத்துவம் மற்றும் பொருத்தப்பாடுடனான பொதுக் கல்வியை மேம்படுத்துவதற்கான தலைமைத்துவத்தை வழங்கும் நாட்டின் பிரதான நிறுவனமான மஹாரகம தேசிய கல்வி நிறுவனத்தின் பணியாளர்கள் 350 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பரா மருத்துவ ஊழியர்கள் அடங்கிய இராணுவ வைத்தியக் குழுவிடம் குறித்த செயற்பாடு ஒப்படைக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தின் கீழ் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்கள் இதனை பெரிதும் பாராட்டினர். அதன்படி, கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுப்படும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கு திட்டமானது சுகாதார அமைச்சு, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு விரைவில் முன்னெடுக்கப்படும்.

கல்வி முகாமையாளர்கள், ஆசிரியர் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, பாடசாலை பாடத்திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் கல்வி குறித்த கொள்கை ஆராய்ச்சி நடத்துதல் ஆகியவற்றுக்கு பொறுப்பான தேசிய கல்வி நிறுவனம் மத்திய நிறுவனம் ஆகும், மேலும் இது கற்பித்தல் தொகுதிகளுக்கு பொருந்தக்கூடிய கல்வி தொகுதிகள் மற்றும் நாட்டிலுள்ள பிற தொடர்புடைய கல்வி பயிற்சி திட்டங்கள் போன்ற விடயங்களில் கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்புடையதாகும்.