Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 18:54:52 Hours

கல்கமுவவில் உள்ள வீரகெட்டிய நீர்த்தாங்கியை புனரமைக்கும் பணிகளில் படையினர் மும்முரம்

இலங்கை பொறியியல் படையணியினர் கமநல அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து “வாரி சௌபாக்கிய” (நீர்ப்பாசனத்தின் செழுமை) என்ற திட்டத்தின் கீழ், குருணாகல் விவயாச மேம்பாட்டு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து கல்கமுவ வீரகெட்டிய நீர்த்தாங்கியின் புனரமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் நீர்ப்பாசனத் துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் வழங்கும் வகையில், இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவ பொறியாளர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவு மற்றும் கட்டுமான நிபுணத்துவத்துடன் தற்போது பல நீர்த்தாங்கிகளை மேம்படுத்தும் திட்டங்களை தலைமை கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நீர்த்தாங்கியின் புனரமைப்பு பணிகள், ஆலைப் பொறியியலார்கள் பிரிகேடினரால் பொறியல் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர அவர்களின் அறிவுறத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் வான் கதவு மற்றும் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் உள்ளிட்ட ஏனைய கொங்கிரீட் கட்டுமான பணிகள் 11 வது இலங்கை கள பொறியியல் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொறியியல் படைப்பிரிவின் தளபதி ஆலை பொறியியல் படையினரின் ஒத்துழைப்புடன் உரிய காலத்திற்குள் பணிகளை திறம்ட செய்து முடிப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்.