02nd November 2017 19:46:04 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகனத்திற்கு கீழ் இயங்கும் 6ஆவது (தொண்டர்) இராணுவ மகளிர் படையணியினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் 30 பேருக்கு உலர் உணவு பொருட்கள் நன்கொடை வழங்கப்பட்டது.
இராணுவ மகளிர் படையணியினால் இந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு 750 ரூபாய் பெறுமதிமிக்க உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழிக்காட்டலின் கீழ் 6 ஆவது இராணுவ மகளிர் படையணியினால் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு படையணியின் பிரதி கட்டளை அதிகாரி மேஜர் ஜீவனி ராஜபக்ஷ உட்பட அதிகாரிகள் மற்றும் இராணுவ வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
bridgemedia | NIKE RUNNING SALE