Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2020 11:06:03 Hours

கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ உதவிகள் 56 ஆவது படைப் பிரிவால் வழங்கி வைப்பு

வவுனியா சுகாதார அதிகாரியான டொக்டர் எஸ் சுஜானி அவர்களது மேற்பார்வையில் 15 ஆவது சிங்கப் படையணியின் பூரன ஏற்பாட்டில் விளையாத்திகுளத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் ஊட்டச் சத்துகள் கடந்த ஆகஸ்ட் மாதம் (28) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் 562 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சேனக பிரேமவங்ஷ அவர்களது தலைமையில் இருபத்தி இரண்டு கர்ப்பிணிப் பெண்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பின்னர் அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.. வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 22 கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த மருத்துவ பரிசோதனைகளின் பின்பு உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரே, 562 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சேனக பிரேமவங்ஷ , 15 (தொ) சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.எம்.எம்.பீ அத்தநாயக மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர். Sports Shoes | adidas garwen spezial white shoes - New In Shoes for Men