10th August 2021 08:00:46 Hours
காலி மாவட்டத்தில் கொவிட் – 19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் 61 வது படைப்பிரிவின் கீழுள்ள 14 வது கெமுனு ஹேவா படை, பொறியியல் சேவை படையினர் கராபிட்டிய போதனா வைத்தியசாலை வார்டு ஒன்றினை கொவிட் சிகிச்சை மையமாக மாற்றியமைத்தனர்.
படையினரால் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்ட புதிய சிகிச்சை நிலையம் 120 கட்டில்களுடன் கூடியதாக இருப்பதோடு, 2 – 3 நாட்களுக்குள் புதிய வார்ட்டின் கட்டமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டு வியாழக்கிழமை (5) வைத்தியசாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
அதேநேரம் 61 வது படைப்பிரிவு மற்றும் 613 பிரிகேட் தளபதிகளின் ஒருங்கிணைப்பு மூலம் 100 கட்டில் விரிப்புகள் வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டன. மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, 61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே, 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு ஆகியோரின் வழிகாட்டுதலின் மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.