Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th April 2021 06:00:22 Hours

கம்புருபிட்டிய சிறுவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் விநியோகம்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் கீழ் இயங்கும் கம்புருபிட்டியில் அமைந்துள்ள 613 வது பிரிகேட்டைச் சேர்ந்த படையினர் அன்பளிப்பு திட்டதை செவ்வாய்க்கிழமை (13) 613 வது பிரிகேட் தலைமையகத்தில் முன்னெடுத்தனர். இதற்கான அனுசரணையானது தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

அந்த பரிசு பொதிகள் சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் ஆடைகள் உள்ளடக்கியவையாக காணப்பட்டன.

இந்த ஏற்பாட்டின் போது மொத்தம் 60 பேர் கம்புருபிட்டி பகுதி அந்த நிவாரணப் பொதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகேயின் அறிவுறுத்தலின் பேரில், 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு அவர்களின் மேற்பார்வையில் இந்த சமூகம் சார்ந்த நிகழ்வு இடம்பெற்றது.