15th April 2023 19:32:39 Hours
61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேடின் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையினர் கடற்கரை மற்றும் கப்பரத்தோட்ட கடற்கரையோரத்தில் 'சயுர ரகின ரெல்ல சமக எக்வ சயுரட ஹூஸ்மக்' என்ற கருப்பொருளில் கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு தங்கள் மனிதவளத்தை 10 ஏப்ரல் 2023 அன்று வெலிகமவில் வழங்கினர்.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாத்தறை பிராந்திய அலுவலகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
கடல் சுற்று சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் அனுமதியுடன் படையினர் இச்சமூக நலன் சார்ந்த திட்டத்திற்கு பங்களித்தனர்.
61 வது காலாட் படைப்பிரிவு தளபதி, 613 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் படையினரின் ஈடுபாட்டை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
வெலிகம சம்பத் வங்கி, வெலிகம பே டைவ் நிலையம் மற்றும் கப்பரதொட்ட நாரா நிறுவனம் - பிராந்திய ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகளும் இந்த கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவினர்.