Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கபடி சம்பியன்ஷிப் போட்டியில் 22 ஆவது படைப்பிரிவு வெற்றி

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நடாத்தப்பட்ட கபடி சம்பியன்ஷிப் போட்டி-2019 இன் இறுதிப் போட்டியானது, கடந்த சனிக் கிழமை 10 ஆம் திகதி பொலன்னறுவை விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

மேலும், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜெயசேகர அவர்கள் இந் இறுதி பரிசளிப்பு நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கடந்த ஜூலை 20 தொடக்கம் ஓகஸ்ட் 05 ஆம் திகதிவரை இடம்பெற்ற 10 போட்டிகளில் 5 குழுக்கள் கலந்துகொண்டன.

அதனைத் தொடர்ந்து, பிரதம அதிதியவர்கள் 23 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில உடலுப்பொல அவர்களினால் வரவேற்கப்பட்டு இறுதிப் போட்டியாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.

மேலும், 22 ஆவது படைப்பிரிவு மற்றும் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு எல்லையின் கபடி குழுக்கள் இறுதி போட்டியில் கலந்து கொண்டு 55-30 என்ற புள்ளி வித்தியாசத்தில் 22 ஆவது படைப்பிரிவு இவ்வருடத்திற்கான சம்பியன்ஷிப்பினை தனதாக்கிக் கொண்டது.

இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களானது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால், 22 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க, கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு எல்லையின் கட்டளைத் தளபதி ஐ.ஓ.டபல்யூ. மடொல, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் ஏனைய படையினர் உட்பட பலரின் பங்களிப்புடன் வழங்கப்பட்டது. Nike air jordan Sneakers | Nike