27th March 2021 08:41:32 Hours
கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரகத்தின் அரசியல் அலுவல்கள் அதிகாரி திரு.பொன்னத்துரை கோபிநாத் ஆகியோர் வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றை மேற்கொண்டனர்.
வருகை தந்த அதிகாரிகளை யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அன்புடன் வரவேற்றார்.
யாழ்ப்பாண தளபதி அலுவலகத்தில் நடைபெற்ற நல்லிணக்கச் சந்திப்பின் போது, மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவுடன் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத் திட்டங்கள், பாதுகாப்பு நெருக்கடிகள், அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு, நல்லிணக்க செயன்முறைகள் போன்றவை குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், யாழ்ப்பாண குடாநாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள், உள்ளிட்ட காரணங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், சந்திப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணியும் இந்நிகழ்வில் பங்குபற்றினார். Nike air jordan Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf