Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2023 21:19:58 Hours

கனேடிய உயர் ஸ்தானிகராலய தூதுக்குழு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

கொழும்பில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் தூதுக்குழுவினர் கிழக்கு மாகாணத்தில் ‘ஆயத்த வேலைத்திட்டத்தை’ ஆரம்பிக்கும் நோக்கத்துடன் திங்கட்கிழமை (செப்டம்பர் 18) கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு சேவைகளின் பாதுகாப்பு/ஆயத்த திட்ட அதிகாரி திரு. ஹர்ஷ சேனாநாயக்க மற்றும் திரு. ரொன் பீபுஷ்ஷார் ஆகியோரை கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

இந்த விஜயத்தின் நோக்கமானது, கூட்டுப் பங்காளித்துவத்தை வளர்ப்பதும், வலுவான வலையமைப்பை நிறுவும் போது அனைத்து பங்குதாரர்களிடையே உகந்த பணித் தயார்நிலையை உறுதி செய்வதும் ஆகும்.

பின்னர், அப்பகுதியில் அவசரகாலத் தயார்நிலை, அனர்த்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் சுமுகமாக கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது, கிழக்கு தளபதி அவர்களுக்கு நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் இராணுவத்தினால் அவர்களின் அன்றாட அலுவல்களுக்காக வழங்கப்படும் உதவிகள் போன்றவற்றிற்கு விசேட கவனம் செலுத்தி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பங்கு மற்றும் பணிகளை விளக்கினார்.

கிழக்கு மாகாணத்தில் ‘ஆயத்த வேலைத்திட்டம்’ தொடர்வதற்காகத் தூதுக்குழுவினர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்குச் சென்றனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஏஎச்ஏடி ஆரியசேன ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களும் கலந்துரையாடலில் பங்குகொண்டனர்.