Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2021 09:25:10 Hours

கனேடிய உயர்தானிகர் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் திரு டேனியல் பூட் மற்றும் அரசியல் அதிகாரி திரு. பி. கோபிநாத் அகியோருடன் இணைந்து யாழ்பாணத்திற்கான உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட இலங்கைக்கான கனேடிய உயர்தானிகர் அதிமேதகு டேவிட் மெக்கினோன் அவர்கள், யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களை அப்படைத் தலைமையகத்தில் வைத்து புதன்கிழமை (13) சந்தித்தார்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இருவருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது போருக்குப் பிந்தைய காலத்தில் இராணுவத்தின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள், நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் தொர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் தனியார் நிலங்களை விடுவிப்பதில் இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் இரு தரப்பினரும் கலந்துரையாடினார்கள்.

இச் சந்திப்பின் இறுதியில், மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு கனேடிய உயர்ஸ்தானிகருக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக ஒரு நினைவுச்சின்னத்தை வழங்கினார்.