Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2021 13:03:24 Hours

கனகராயன்குளத்தில் குடிநீர் வசதி ஏற்பாடு

561 வது பிரிகேட் படையினர் கனகராயன்குளம் A9 வீதியூடாக பயணிப்பவர்களுக்காக குடிநீர் விநியோக நிலையத்தை செவ்வாய்க்கிழமை (2) ம் திகதி திறந்து வைத்தனர்.

இந்த பரபரப்பான பிரதான வீதியில் தண்ணீருக்காக எந்த இடத்தையும் அணுக முடியாததால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயணிகளுக்கு சேகரிக்க ஒரு சமூக நலத் திட்டத்தின் அடிப்படையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

56 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி ஆகியோரின் ஆசிகளுடன் 561 வது பிரிகேட் தளபதியினால் திட்டம் திறந்து வைக்கப்பட்டது.