Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 23:00:49 Hours

கந்தளாய் படை முகாமுக்குள் சேதன பசளை உற்பத்தி

அரசாங்கத்தின் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கந்தளாயில் அமைந்துள்ள 1 வது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணி முகாமிற்குள் ஜூன் 8 அன்று சேதன பசளை உற்பத்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி திட்டமானது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹந்துன்முல்ல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் , 1 வது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் கட்டளை அதிகாரி சீ.எஸ்.தெமுனி அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்று வருவதுடன் அப்படையணியின் மேஜர் டபிள்யூஆர்ஏசீ பிரசன்ன அவர்களினால் குறித்த திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த திட்டம் சேதன பசளை உற்பத்தியின் நன்மைகள் தொடர்பில் சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுவதோடு, உள்நாட்டு விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்க இராணுவம் எதிர்பார்க்கிறது.