Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd April 2019 15:46:46 Hours

கண்டி போதனா வைத்தியசாலையில் இராணுவ வைத்திய பிரிவை மீள் பெறுவதற்கான கலந்துரையாடல்

பொது மக்களின் நலன்கருதி கண்டி போதனா வைத்தியசாலையில் பொதுமக்களின் பாவனைக்காக காணப்பட்ட இராணுவ வைத்தியப் பிரிவை மீள் பெறுவதற்கான கலந்துரையாடல் இவ் வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் சுமன் ரத்நாயக்க மற்றும் 11ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார போன்றோரிற்கிடையே மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குறித்த இவ் வைத்தியசாலையிலுள்ள வைத்தியதளமானது இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டதனால் பலவிதமான நோயாளர்கள் பல அசௌகரயங்களையும் மற்றும் இடர்பாடுகளையும் ஏற்படு;த்தியுள்ளன.

மேலும் இத் தேவைப்பாட்டை கருத்திற் கொண்டு படைத் தளபதியவர்கள் மற்றும் பணிப்பாளரான வைத்தியர் சமன் ரத்நாயக்க அவர்களின் கலந்துரையாடலின் பின்னர் 2019ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதியிலிருந்து இப் பிரிவு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த திங்கட் கிழமை (01) இப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் இணைந்து இவ் வைத்தியப் பிரிவை பார்வையிட்டனர். Asics shoes | Nike for Men