01st May 2025 20:44:00 Hours
கண்டி தர்மராஜா கல்லூரி கேட்போர் கூடத்தில் 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை புனித தந்த தாது கண்காட்சியின் (ஸ்ரீ தலதா வந்தனாவ) போது, கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட இராணுவ வீரர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.
இந்நிகழ்வில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.