Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th June 2021 16:09:51 Hours

கண்டி இராணுவ வைத்தியச்சாலையின் இறுதிக் கட்டுமானப் பணிகளை இராணுவ பதவிநிலை பிரதானி ஆராய்வு

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி, கண்டி 11 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்திற்கு அருகாமையில் கட்டப்படும் மத்திய மலைநாட்டு இராணுவ வீரர்களுக்கான புதிய இராணுவ வைத்தியசாலை வளாகம் இப்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

திங்களன்று (07) 11 வது படைப்பிரிவின் முன்னாள் தளபதியும் தற்போதைய இராணுவத் பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார குறித்த இடத்திற்குச் சென்று திறமையான இராணுவ பொறியியலாளர்களின் இறுதி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

வருகை தற்த இராணுவ பதவி நிலைப் பிரதானியினை 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே அன்பாக வரவேற்றதுடன் அதிகாரிகள் மற்றும் கட்டுமான பணியில் உள்ள சிப்பாய்களுடன் மேற்பார்வை செய்தார்.

மேற்பார்வையின் பின்னர் இராணுவ பதவி நிலைப் பிரதானி சில ஆக்கபூர்வமான எண்ணங்களை கட்டமைப்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டடார். மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே வழங்கல் பணிப்பாளர் நாயகம், மின் இயந்திர பொறியியலாளர் பணிப்பாளர் மற்றும் சில பணிப்பாளர்கள், 11 வது படைப்பிரிவு தளபதி மற்றும் இராணுவ பொறியியலாளர்களும் கலந்து கொண்டனர்.

123 கட்டில்களை கொண்ட புதிய இரண்டு கட்டட வைத்தியசாலை வளாகம், ஓய்வுபெற்ற அதிகாரிகள் / சிப்பாய்களுக்கு 4 விடுதிகளும் சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் நிபுணர் அறைகள், எக்ஸ்ரே பிரிவு, ஈ.சி.ஜி பிரிவு, ஆய்வு கூடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் பிரிவு, மருந்தகம், அட்டை பிரிவு , தலைமை தாதி அலுவலகம், எச்.டி.யு பிரிவு, பல் வைத்திய பிரிவு, தாதியர் ஓய்வு அறை, களஞ்சியம், பெண் பிரிவு, பிரமுகர் அறைகள், ஓய்வு அறைகள், சிரேஸ்ட அதிகாரிகளுக்கான தனி அறைகள் நான்கு, அனைத்து அதிநவீன டிஜிட்டல் மற்றும் ஐ.டி வசதிகள் மற்றும் நவீன பாகங்கள் / உபகரணங்கள் கொண்டதாக அமைகின்றது.

அடுத்த கட்டிடத்தில் வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருந்து போடும் இடம், சத்திர சிகிச்சை பிரிவு, மீட்பு பகுதி, சலவை பிரிவு, பிசியோதெரபி பிரிவு, நிர்வாக வளாகம், மருத்துவ அதிகாரிகளின் தங்குமிடம் மற்றும் ஒரு சில கிளைகளும் உள்ளன.

இதற்கிடையில், இலங்கை இராணுவ ஹொக்கி கழகத் தலைவராகவும் பதவி வகிக்கும் இராணுவ பதவி நிலைப் பிரதானி பல்லேகலை செயற்கை ஹொக்கி விளையாட்டு அரங்கின் கட்டுமானப்பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் ஆண்கள் மற்றும் பெண் வீரர்களுக்கு உரையாற்றினார்.

இலங்கை இராணுவ ஹொக்கி கழக உதவி தலைவர் மற்றும் இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் இந்த விஜயத்தின் போது திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கினார். வளாகத்திற்குள் உள்ள அதிகாரி வீரர்களுக்கான புதிய தங்குமிட வளாகம் அமைப்பதற்கான அனுமதியினை இராணுவ பதவி நிலைப் பிரதானி வழங்கினார்.