Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2025 16:24:52 Hours

கண்டியில் உள்ள படையணிகளுக்கு இராணுவத் தளபதி நிருவாக செயல்பாட்டு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கண்டியில் உள்ள பல முக்கிய இராணுவ தளங்களுக்கு நிருவாக செயல்பாட்டு விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயம் இலங்கை இராணுவத்திற்குள் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிருவாக சிறப்பை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி 6 வது களப் பொறியியல் படையணி, 6 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி மற்றும் இலங்கை ரைபில் படையணி ஆகியவற்றை பார்வையிட்டார்.