Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2021 13:13:43 Hours

கடத்தப்பட்ட மஞ்சளோடு இரண்டு சந்தேக நபர்கள் படையினரினால் கைது

இன்று காலை(18) 10.00 மணியளவில் 54 வது படைப் பிரிவின் 542 வது பிரிகேட்டின் 15 வது (தொண்) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் மன்னார் குஞ்சிகுளத்தில் உள்ள வீதித் தடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, கடத்தப்பட்ட 219 கிலோ மஞ்சளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்ப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மிட்சுபிஷி கெண்டர் லொறியில் நிட்டம்புவ பகுதிக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது சந்தேகமடைந்த படையினர் வாகனத்தை சோதனைக்காக நிறுத்தினர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை படையினர் மஞ்சள் கையிருப்புடன் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட மஞ்சளின் மதிப்பு ரூ 1.3 மில்லியன் ஆகும்