Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th October 2022 15:31:03 Hours

கஜபா படையணியின் 39 வது ஆண்டு நிறைவு நாளுக்கு முன் படைவீரர்களுக்கு நினைவு அஞ்சலி

சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகம் அதன் 39 வது படையணி தினத்தை (ஒக்டோபர் 14) கொண்டாடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வியாழக்கிழமை (13) பிற்பகல் வீரமிக்க கஜபா படையணி போர் வீரர்களின் விலைமதிப்பற்ற நினைவுகளை அன்புடன் நினைவு கூர்ந்தது. இராணுவத் தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தலைமையில் கௌரவிக்கப்படும் ஒரு புனிதமான அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது. கஜபா படையணி ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் துணைவியார் திருமதி மானெல் மங்கலிகா விமலரத்ன அவர்கள் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டமை கஜபா படையணி குடும்பத்திற்கு பெரும் முக்கியத்துவத்தைச் சேர்த்தது.

கஜபா படையணி போர்வீரர்களின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை தொடர்ந்து 'பிரித்' ஓதுதல், அன்னதானம் வழங்குதல், கஜபா படையணி ஸ்தாபக தந்தைக்கு மலர் அஞ்சலி செலுத்துதல் உட்பட நிகழ்வுகள் நடைப்பெற்றதோடு நூற்றுக்கு மேற்பட்ட போர்வீரர்கள், உயிர்நீத்த மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முறையே தேசிய கீதம், இராணுவப் பாடல் மற்றும் கஜபா படையணி கீதம் பாடுதல் என்பவற்றினை தொடர்ந்து மத அனுஷ்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து நினைவுத் தூபியைச் சுற்றி இருந்த இராணுவத்தினர் மற்றும் கூடியிருந்த அனைவரும் இராணுவத் தளபதியுடன் இணைந்து உயிர்நீத்த கஜபா படைவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து நினைவுச்சின்னத்தின் மீது அனைவரது பார்வையும் பதிந்திருந்த நிலையில் அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் எதிரொலிக்கும் கம்பீரமான மெல்லிசைகளுக்கு மத்தியில் உயரமான அதே சமயம் பிரமாண்டமான கஜபா படையணி நினைவுச் சின்னத்தை நோக்கிச் சென்று அந்த மாவீரர்களின் நினைவு தூபிக்கு வணக்கம் செலுத்தினார். கஜபா படையணியின் முதன்மை போர் வீரர்கள் நினைவாக நினைவு தூபிக்கு திருமதி மானெல் மங்கலிகா விமலரத்ன, இராணுவ சேவை வனிதாயர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோரும் ள் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

உயிர்நீத்த கஜபா படையணி போர்வீரர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் தங்கள் தாய் அல்லது உறவினர்களுடன் துல்லியமான கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும், வெள்ளை உடை அணிந்த துக்கத்துடன் தங்கள் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்க முன்னோக்கிச் சென்றது ஒரு அற்புதமான காட்சியாகவும் மற்றும் அரிதான காட்சியாக பார்க்கப்பட்டது. இது சமகால இராணுவ வீரர்களின் நினைவுகளுக்கு புனிதம், பாசம் மற்றும் முழுமையான மரியாதை ஆகியவற்றை பகிரும் தருணமாகும்.

சிரேஷ்ட கஜபா படையணி அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் உயிர்நீத்த குடும்ப அங்கத்தவர்கள் இதைப் பின்பற்றி, இலங்கைத் தாயின் ஒற்றையாட்சி அந்தஸ்தைப் பாதுகாப்பதற்காக உயிர்தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்த வரிசையில் நின்றனர்.

ரீவீல் மற்றும் லாஸ்ட் போஸ்ட் ஒலிக்கப்பட்டதும், அனைவரும் எழுந்து நின்று ஒரு பெரிய கூட்டத்தின் முன்னிலையில் அன்றைய நினைவேந்தலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அந்த போர்வீரர்களின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்தனர்.

2009 மே மாதத்திற்கு முன்னர் அமைதியை நிலைநாட்டுவதற்காக யுத்தத்தின் போது அழியாத பணியை ஆற்றி தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த கஜபா படையணியின் 175 அதிகாரிகள் மற்றும் 4075 சிப்பாய்களின் தியாகம் என்றும் அனைத்து இலங்கையர்களாலும் போற்றப்படும்.