Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2024 16:30:06 Hours

கஜபா படையணியின் புதிய அருங்காட்சியகம் மற்றும் கேட்போர்கூடத்திற்கு அடிக்கல் நாட்டல்

கஜபா படையணியின் உத்தேச படையணி அருங்காட்சியகம் மற்றும் கேட்போர் கூடத்தின் நிர்மாணப்பணிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 11) படையணி தலைமையக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.

இராணுவ தளபதியினை இராணுவ பதவி நிலை பிரதானியும் கஜபா படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதி, இராணுவ பதவி நிலை பிரதானியும் கஜபா படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ போர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி மற்றும் கஜபா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டப்ளியூஎம்ஏபி விஜேகோன் யூஎஸ்பீ என்டிசீ ஆகியோருடன் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் அடிக்கல்லை நாட்டி வைத்தார். தொடர்ந்து, மகா சங்கத்தினர் ஆசி வழங்கினர்.

அதன் பின்னர், 2 வது பொறியியல் சேவைகள் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் ஜே.ஆர்.எம்.எஸ்.ஜயவர்தன அவர்கள் இந் நிர்மாணத் திட்டம் குறித்து விளக்கமளித்தார். 2 வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் கஜபா படையணி படையினர் இத் திட்டத்தின் கட்டுமானத்திற்காக உதவியை வழங்குவர்.

முன்மொழியப்பட்ட கட்டிடம் இரண்டு மாடிகளைக் கொண்டதாகும். தரை தளத்தில் அருங்காட்சியகத்திற்கான ஒரு கண்காட்சி கூடம் இருக்கும், அதே நேரத்தில் முதல் தளம் 667 இருக்கைகள் கொண்ட பல வசதி கொண்ட அரங்கமாக இருக்கும், இது பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு ஏற்றதாகும்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.