11th October 2021 13:50:31 Hours
கஜபா படையணியின் தலைமையகத்தில் (10) நடைபெற்ற இராணுவ ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளின் போது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் கஜபா படையணியினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானம் படையினரின் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் மேஜர் திஸர பெரேரா வீசிய முதல் பந்தை ஜனாதிபதி முகம் கொடுத்தார்.
இதன்போது அனைவரதும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சர்வதேச தரமிக்க கிரிக்கெட் மைதானத்தில் புகழ்மிக்க கிரிக்கெட் வீரரான மேஜர் திசர பெரேரா அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் பந்ததை அடித்தாடிய ஜனாதிபதி அதன் நிறைவில் கிரிக்கெட் வீரர்களின் பாணியில் கிரிக்கெட் மட்டையில் தனது கையொப்பத்தை இட்டார்.
மேற்படி நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் புதிய கிரிக்கெட் மைதானத்தின் பார்வையாளர் மண்டபத்தை நிறுவுவதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததோடு, இவ்விழாவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் கொவிட் – 19 தொற்றுநோய் பரவலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து முன்னெடுக்கப்பட்டது.