Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2021 14:45:50 Hours

கஜபா படையணியினர் ஸதாபக தந்தையை நினைவுகூறி மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கல்

ஊர்காவற்துறையின் அராலித்துறையில் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்த கஜபா படையணியின் ஸ்தாபகர் மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, கஜபா படையணியின் கர்ணல் வை.எம். பலிபான புகழ்பெற்ற மாவீரர் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆகியோரின் நினைவாக 08 ஆகஸ்ட் 2021 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் கஜபா படையணி தலைமையகத்தின் அழைப்பின் பேரில் இக்கிரிகொல்லேவ ரஜமஹா விகாரை மற்றும் மங்கடவல ரஜமஹா விகாரை ஆகியவற்றின் மகா சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அவர்களின் 29 வது நினைவு தினத்தையொட்டி பல நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த மத நிகழ்ச்சி பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியும் கஜபா படையணி மற்றும் சிறப்பு படையணியின் படைத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா வழங்கிய வழிகாட்டுதல்களின்படி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம மற்றும் சில பதவி நிலைப் அதிகாரிகள் மற்றும் சில பணியாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வு சுகாதார அதிகாரிகள் மற்றும் அந்தந்த தலைமையகங்களால் வழங்கப்பட்ட கடுமையான கொவிட் -19 பாதுகாப்பு சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்பட்டது.